7.5% இடஒதுக்கீட்டால் நிறைவேறிய 15 ஆண்டுகால காத்திருப்பு - மருத்துவம் படிக்க இணைந்த செவிலியர்

கனிமொழி அவரது கணவர் சுதாகர்

அரசுப் பள்ளியில் படித்து 15 ஆண்டுகள் கழித்து நீட் தேர்வு எழுதி 7.5% ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க இணைந்துள்ளார் செவிலியர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா குருவரெட்டியூர் கிராமத்தில் அரசு மேல் நிலைப்பள்ளியில் 2005ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தார் கனிமொழி. குடும்ப சூழ்நிலை காரணமாக எம்.பி.பி.எஸ் படிப்பில் அப்போது சேர முடியவில்லை.  பின் நர்சிங் படிப்பு சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து சில மாதங்கள் செவிலியராக பணியாற்றியுள்ளார். 2012ல் அவருக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது ஏழு வயதில் ஒரு ஆண் குழந்தையும் எட்டு மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. அவருக்கு வயது 33.

Also read... 7.5 சதவீத இடஒதுக்கீடு: நனவாகும் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவுகள்தற்போது மருத்துவம படிக்கலாம் என ஆசைப்பட்டு நீட் தேர்வு எழுதினார். கடைசி நேரத்தில் 7.5% இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டதால் தனது பழைய ஆவணங்களை தேடி எடுத்து அதற்கு விண்ணப்பத்து தற்போது சேலம் அன்னபூரணா கல்லூரியில் அரசு கோட்டாவில் இடம் கிடைத்துள்ளது. தன் குடும்பம் மிகவும் உறுதுணையாக இருந்ததாக அவர் கூறினார்.

அவரது கணவர் சுதாகர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் முடநீக்கியல் மருத்துவர் ஆவார். எல்லா மாணவர்களுக்கு பெற்றோர் உடன் வருவர். கனிமொழிக்கு அவரது கணவர் 'parent' என்ற டேக் அணிந்து உடன் வந்திருந்தார். தன் மனைவியின் திறமையாலேயே அவருக்கு இடம் கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published: