Home » News » Tamil-nadu » THE NUMBER OF PEOPLE IN CHENNAI WAS SHOULD NOT FOLLOW CURFEW VIN GEE

ஊரடங்கை மீறுவோரைக் காட்டி கொடுக்கும் பேஸ்புக்...!

ஊரடங்கை மதிக்காததே கொரோனோ சென்னையில் அதிகம் பரவிட காரணம் என ஐ.ஐ.டி குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஊரடங்கை மீறுவோரைக் காட்டி கொடுக்கும் பேஸ்புக்...!
கோப்புப் படம்
  • Share this:
மூன்றாவது கட்ட ஊரடங்கின் போது மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் மக்கள் நடமாட்டம் மிக அதிக அளவில் இருந்ததாக சென்னை ஐஐடி நடத்திய  ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னை ஐ.ஐ.டி பேஸ்புக் நிர்வாகத்துடன் data for good என்கிற திட்டத்தின் கீழ் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. இதன் மூலம் பேஸ்புக்  பயன்படுத்தும் நபர் எந்த பகுதியில் இருந்து அதனை பயன்படுத்துகிறார் என்பதை பேஸ்புக்கில்  உள்ள location என்கிற வசதியின் மூலம் அறிய முடியும்.

ஊரடங்கை பொருட்படுத்தாது வெளியே மக்கள் எந்த பகுதிகளில் அதிகம் நடமாடினார்கள் என்கிற விவரங்களை ஸ்மார்ட் போன்களில் இருந்து ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் கொண்டு திரட்டப்பட்டு ஐ.ஐ.டி குழு வரைபடம் ஒன்றினை தயாரித்துள்ளது.


இதில் விழுப்புரம், சென்னை, சிவகங்கை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு காலத்தில் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருந்துள்ளது. அதிலும் குறிப்பாக மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் சென்னையில் வார இறுதி நாட்களில் அதிகளவு மக்கள் நடமாட்டம் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

வட சென்னை, மத்திய சென்னை, கோயம்பேடு சந்தை  ஆகிய பகுதிகளில் மக்கள் நடமாட்டம் ஊரடங்கை பொருட்படுத்தாது அதிகளவு இருந்துள்ளது தெரியவந்துள்ளது. ஏப்ரல் மாத இறுதி வாரத்தை  ஒப்பிடுகையில் இந்த மாதம் 17 சதவிகிதம் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

அதே போன்று 2-வது கட்ட ஊரடங்கை ஒப்பிடுகையில் இந்த மாதம் மக்கள் நடமாட்டம்  7 சதவிகிதம் அளவு அதிகரித்து காணப்படுவதாக ஐ.ஐ.டி குழு தெரிவித்துள்ளது. தாங்கள் திரட்டிய தரவுகளை கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையினை தமிழக அரசிடம் ஐ.ஐ.டி குழுவினர் சமர்பித்துள்ளனர்.






Also see...
First published: May 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading