Home /News /tamil-nadu /

'கஜா' புயல் பாதிப்பில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு

'கஜா' புயல் பாதிப்பில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

கஜா' புயல் கரையை கடந்ததை தொடர்ந்து, நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
'கஜா' புயல் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'கஜா' புயல் கரையை கடந்ததை தொடர்ந்து, நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் சிக்கி தஞ்சாவூரில் அதிகபட்சமாக 11 பேர் உயிரிழந்தனர். நாகை மற்றும் புதுக்கோட்டையில் தலா 9 பேர் புயல் தாக்குதலில் உயிரிழந்தனர். மேலும், திண்டுக்கல்லில் ஒருவர் என, இதுவரை மொத்தம் 30 பேர் உயிரிழந்தாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கஜா புயல், நாகையில் இருந்து, திருச்சி, மதுரை, தேனி மாவட்டத்தைத் தாண்டி கேரளாவில் கோட்டயம், எர்ணாகுளம் வழியாக நகர்ந்து, அரபிக் கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைகொண்டுள்ளது.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Cyclone Gaja

அடுத்த செய்தி