Home /News /tamil-nadu /

வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்களில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்வு!

வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்களில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்வு!

மாதிரி படம்

மாதிரி படம்

சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை பரிசோதனை செய்ததில் நேற்று வரை 7 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.

டிசம்பர் 1ம் தேதி முதல் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அதிக பாதிப்புகள் நாடுகள் என 12 நாடுகளில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணித்து பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். பரிசோதனை முடிவில் அறிகுறி இருந்தால் தனிமைபடுத்த வேண்டும், தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களின் மாதிரிகள் மரபனு பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை பரிசோதனை செய்ததில் நேற்று வரை 7 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 5 பேரும், திருச்சியில் 2 பேரும்(கும்பகோணத்தில் 1) நாகர்கோயிலில் 2 பேரும்(மதுரை) தனிமைப்படுத்துதலில் உள்ளனர்.

நேற்று சென்னை வந்த ஒரு பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமை படுத்துதலில் உள்ளார். மேலும் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த 67 வயதுடைய நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also read...  மருத்துவமனைக்கு செல்லாமல் தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண்; குழந்தை உயிரிழப்பு

இவர்களது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் ஒருவருக்கு டேக்பாத் பரிசோதனையில் உறுமாறிய தொற்று கண்டறியப்படவில்லை. இவர்களுடன் பயணித்த 30 பேருக்கு(15+15) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைவரும் நலமுடன் உள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Corona, Covid-19

அடுத்த செய்தி