தமிழகத்தில் இன்றுடன் விலகுகிறது வடகிழக்கு பருவமழை...

மழையால் விவசாயிகள் வேதனை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் நிறைவடைவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  வடகிழக்கு பருவமழையின் போதுதான், தமிழகத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும். இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வழக்கமாக டிசம்பர் மாதத்துடன் நிறைவடையும் நிலையில் ஜனவரி இரண்டாவது வாரத்தை கடந்தும் நீடித்தது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ள தென் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. வடகிழக்கில் இருந்து தொடர்ந்து காற்று வீசி வந்ததால் மழை நீடித்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

  இந்நிலையில், இன்றுடன் வடகிழக்கு பருவமழை நிறைவடையும் நிலையை எட்டி உள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. இருப்பினும், புதன், வியாழக்கிழமைகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க...ஒவ்வொரு செங்கல்லும் டாக்டர் சாந்தாவின் புகழ் பாடும் - மு.க.ஸ்டாலின்

  வடகிழக்கு பருவ மழை நீடித்த ஒன்றாம் தேதியில் இருந்து 18-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட கூடுதலாகவே மழை பதிவானதாகவும் குறிப்பிட்டுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: