ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

NLC அனல்மின் நிலைய விபத்து - நிபுணர் குழுவை நியமித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

NLC அனல்மின் நிலைய விபத்து - நிபுணர் குழுவை நியமித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

கோப்புப் படம்

கோப்புப் படம்

என்.எல்.சி. அனல்மின் நிலைய விபத்து குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள நிபுணர் குழுவை நியமித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

என்.எல்.சி. அனல்மின் நிலையத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி நடந்த பாய்லர் விபத்தில் 13 பேரும், மே 7-ம் தேதி நடந்த விபத்தில் 13 பேரும் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு தாமாக முன்வந்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு வழக்காக எடுத்து விசாரித்தது.

விசாரணைக்குப் பின் இந்த விபத்து குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள மத்திய மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம், கடலூர் மாவட்ட மாஜிஸ்திரேட், நீரி அமைப்பு, ஐ.ஐ.டி. சென்னை ஆகியோர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.

Also read... தமிழகத்தில் கொரோனாவின் நிலை என்ன? - தலைமை செயலாளருடன் மத்தியக்குழு ஆலோசனை

விபத்திற்கான காரணம், விபத்து ஏற்பட்டதற்கு காரணமான அதிகாரிகள், என்.எல்.சி. நிர்வாகம் உரிய தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை பின்பற்றியுள்ளதா? உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றியுள்ளதா? மனிதர் மற்றும் மனிதரல்லாத உயிர்கள், சுற்றுச்சூழல், பொது சுகாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு, என்.எல்.சி. நிர்வாகத்திடம் பெற  வேண்டிய இழப்பீட்டுத் தொகை எவ்வளவு, மறுசீரமைப்பு செய்வதற்கான வழிகள் ஆகியவை குறித்து நிபுணர் குழு விசாரிக்க வேண்டும் என்றும் கூறியது.

மேலும் இந்த விசாரணையின் போது உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் 30 லட்சம் இழப்பீடு வழங்க முடிவெடுத்துள்ளதாக என்.எல்.சி. நிர்வாகம் தெரிவித்தது. இதை இடைக்கால நிவாரணமாக ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம் தற்போது சிகிச்சையில் இருக்கும் 7 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாயும், வீடு திரும்பிய 3 பேருக்கு தலா 1 லட்ச ரூபாயும் வழங்கவும், இதுதவிர தனியாக 5 கோடி ரூபாயை இடைக்கால இழப்பீடாக மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் என்.எல்.சி. நிர்வாகம் 2 வாரங்களுக்குள் வழங்கவும் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மேலும்  உரிய பாதுகாப்பு விதிகளை மீறிய அதிகாரியை கண்டறிந்து தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றும் வரை அனல்மின் நிலையம் செயல்படாமல் இருப்பதை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பர்  3-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Neyveli, NLC