எண்ணூர் கழிமுகத்தில் கழிவுகளை கொட்டி மாசு ஏற்படுத்தியதால் காமராஜர் துறைமுகத்துக்கு ரூ.4 கோடி அபராதம் விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
எண்ணூரில் வடசென்னை அனல்மின் நிலையம் கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதிலிருந்து வெளியேற்றப்படும் நிலக்கரி சாம்பலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம், அனல்மின் நிலையத்துக்கு அருகிலுள்ள பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கொசஸ்தலையாற்றில் கொட்டி வந்தது.
காமராஜர் துறைமுகம் தனது விரிவாக்கப் பணிகளுக்காக கழிமுகப் பகுதியில் தூர்வாரி, 73,113 கன மீட்டர் கழிவுகளை கடற்கரை ஒழுங்குமுறை மண்டல பகுதிகளில் கொட்டியுள்ளது. அதனால் அப்பகுதியில் உள்ள சதுப்புநிலக் காடுகளும் அழிந்துள்ளன. இதனை அகற்றி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ரவிமாறன் மற்றும் ஆர்.எல். சீனிவாசன் ஆகியோர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
Also read... Chennai Power Cut | சென்னையில் இன்று (07-11-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை
இந்த வழக்கில், எண்ணூர் பகுதியில் நிலக்கரி சாம்பலால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்ப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, வல்லுநர்கள் குழுவை நியமித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
அக்குழு தாக்கல் செய்த ஆய்வறிக்கையில், தொடர்புடைய பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகளில் மக்னீசியம், அலுமினியம், பொட்டாசியம், குரோமியம், காரீயம், கால்சியம் போன்ற தனிமங்கள் அதிகளவில் கலந்திருந்தது. மண்ணில் 100 செமீ ஆழத்துக்கு கீழ் எடுக்கப்பட்ட மண் மாதிரிகளில் இது தெரியவந்துள்ளது" என குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னர் அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், எண்ணூர் கழிமுகப் பகுதிகளில் கழிவுகளைக் கொட்டி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதற்கான இடைக்கால இழப்பீட்டுத் தொகையாக காமராஜர் துறைமுக நிர்வாகம் ரூ.8,34,60,000 செலுத்த வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
இத்தொகையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று காமராஜர் துறைமுக நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. அதில் தொடர்புடைய பகுதியில் மாசு ஏற்பட்டதற்கு துறைமுக நிர்வாகம் காரணமல்ல. அதனால், அமர்வு விதித்துள்ள இழப்பீட்டு தொகையை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.
இந்த மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காமராஜர் துறைமுக நிர்வாகம் கூறும் காரணங்களை ஏற்க மறுத்த அமர்வின் உறுப்பினர்கள், "சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியதால், அதற்கான இழப்பீடாக ரூ.4 கோடியை, 2 மாதங்களுக்குள் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் செலுத்த வேண்டும். மறுஆய்வு மனு மீதான விசாரணை முடித்து வைக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: National Green Tribunal