• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரவுடிகளை ஒழிக்க புதிய சட்ட மசோதா : அடுத்த சட்டப்பேரவை கூட்ட தொடரில் தாக்கல்

ரவுடிகளை ஒழிக்க புதிய சட்ட மசோதா : அடுத்த சட்டப்பேரவை கூட்ட தொடரில் தாக்கல்

தமிழக அரசு

தமிழக அரசு

‘திட்டமிட்ட குற்றச் செயல்கள் தடுப்பு சட்ட மசோதா’  தயாராக உள்ளது, அடுத்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இது சட்டமாக இயற்றப்படவுள்ளது.

  • Share this:
ரவுடிகளை ஒழிக்க ‘திட்டமிட்ட குற்றச் செயல்கள் தடுப்பு சட்ட மசோதா’  தயாராக இருப்பதாகவும், அடுத்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இது சட்டமாக இயற்றப்படும் எனவும் அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அயனாவரம் ரவுடி ஜோசப் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வேலு என்பவர், தன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கின் விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வில்  நடைபெற்று வந்தது.

அப்போது, ரவுடிகள், அரசியல்வாதிகள் என எல்லோரிடமும் சட்ட விரோத ஆயுதங்கள் இருப்பதாகவும்  ரவுடிகளால் போலீசார் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் நீதிபதிகள் கவலை தெரிவித்திருந்தனர். மேலும், ரவுடிகளையும் சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும்  உத்தரவிட்டிருந்தனர்.

இதையடுத்து தமிழகத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக புதிய சட்ட முன்  வடிவு தயாரிக்கப்பட்டு உள்துறை கூடுதல் செயலாளரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக கடந்த விசாரணையின் போது டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு  மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ‘திட்டமிட்ட குற்றச் செயல்கள் தடுப்பு சட்ட மசோதா’  தயாராக உள்ளதாகவும், அடுத்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இது சட்டமாக இயற்றப்படும் என அரசு தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டது.

Must Read : தமிழ்நாட்டில் திருவிழா, கும்பாபிஷேகம் நடத்த தடை தொடரும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், இந்த மசோதா, சட்டமாக இயற்றப்பட்டால்  ரவுடிகளை கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: