தமிழ்நாடு அரசு மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மருத்துவ படிப்புக்கான இடங்கள் ஏழை மாணவனுக்கு கிடைப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் புதிய சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.
ஸ்டாலின் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.
மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வை, தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், மருத்துவ படிப்புக்கான இடங்கள் ஏழை மாணவனுக்கு கிடைப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய குழு ஒன்று அமைத்து உத்தரவிட்டார் அந்த குழுவானது கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.
உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து அதனை செயல்படுத்தும் பொருட்டு தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது, மேற்காணும் குழு மருத்துவக் கல்வி சேர்க்கையில் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வினை புரிந்துகொள்வதற்கு புதிய சட்டத்தை இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற முயற்சிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது.
இந்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த கூட்ட தொடரில் இறுதி நாளான இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் புதிய சட்ட மசோதாவை பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார் இன்றைய தினமே இந்த சட்ட மசோதா ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பேரவையில் நிறைவேற உள்ளது. பின்னர் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு சம்பள வழங்கல் திருத்த சட்ட முன்வடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தாக்கல் செய்யவுள்ளார்.
பாரதியார் பல்கலை கழக திருத்த சட்ட முன்வடிவை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்கிறார்.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை முன் வடிவை பேரவையில் தங்கல் செய்கிறார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம்.
Must Read : மாணவர் தனுஷ் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி
தமிழ்நாடு இந்து சமய அறநிலைய கொடைகள் திருத்த சட்டமுன்வடிவை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தாக்கல் செய்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.