பயணிகளுக்கு ஏதுவாக ரூ.2,467 கோடி செலவில் சென்னையில் புதிய விமான முனையம் அமைக்க மத்திய விமான அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையில் ஆண்டுக்கு மூன்றரை கோடி பயணிகளை கையாளும் வகையில், புதிய விமான முனையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 2 ஆயிரத்து 467 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த முனையத்தில், ஆண்டுக்கு மூன்றரை கோடி பயணிகள் வந்து செல்லும் அளவுக்கு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதிய விமான முனையத்தை அமைப்பதினால் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய விமான அமைச்சகம் அடுத்த 10 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த புதிய விமான முனையத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் முனையத்தில் ஓவியங்கள் இடம்பெறும் என்றும், புதிய முனையம் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 40 விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தகவல்கள் வெளியிட்டுள்ளது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.