Home /News /tamil-nadu /

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் பறக்கும் தேசியக் கொடி

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் பறக்கும் தேசியக் கொடி

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் தேசியக் கொடி

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் தேசியக் கொடி

மேலும் அமைச்சர்கள் வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் மக்களால் தேசிய கொடி ஏற்றப்பட்டு வருகிறது.

    நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக ஆகஸ்டு 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை வீடுகள் தோறும், அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதனை ஏற்று நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் வீடுகளில் நேற்று தேசியக் கொடி ஏற்றிச் சிறப்புச் செய்தனர்.

    Also Read : வீடுகளில் தேசிய கொடி ஏற்றும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை..

    அந்த வகையில், சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. மேலும் திமுக எம்பி கனிமொழி வீட்டில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதே போன்று அமைச்சர்கள் வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு இருந்தது.

    அது போல் சமூகவலைத்தளங்களின் முகப்பில் தேசியக் கொடியை அனைவரும் டிபியாக வைக்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்ட பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் டிபியாக மாற்றியுள்ளனர்.
    Published by:Janvi
    First published:

    Tags: CM MK Stalin, Independence day, Tamil Nadu

    அடுத்த செய்தி