• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • T23 புலியின் நடமாட்டம் ஒரு சிசிடிவி கேமராவில் கூட தென்படவில்லை

T23 புலியின் நடமாட்டம் ஒரு சிசிடிவி கேமராவில் கூட தென்படவில்லை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

T23 புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க 13ஆவது நாளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  • Share this:
    நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகேயுள்ள சிங்காரா வனப்பகுதியில் சுற்றித் திரியும் T23 புலியை பிடிக்க 13ஆவது நாளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அங்காங்கே வைக்கப்பட்டுள்ள, சிசிடிவி கேமராவில் ஒன்றில் கூட இதுவரை அந்த புலியின் நடமாட்டம் தென்படவில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே சிங்காரா வனப்பகுதியில் 4 பேரை அடித்துக் கொன்ற T23 புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க 13ஆவது நாளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புலியை பிடிக்கும் வியூகத்தை நேற்று முதல் வனத்துறையினர் மாற்றியுள்ளனர். அறிவியல் பூர்வமாக இதனை கையாளுவதாக தலைமை வனஉயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்தார்.

    இதன் அடிப்படையில் புலி தென்பட்ட சிங்காரா வனப்பகுதியில் உள்ள மூங்கில் புதர் பகுதி அருகே நான்கு கால்நடைகளை கட்டி வைத்துள்ளனர். இந்த T23 புலி கால்நடைகளை தான் எளிதில் வேட்டையாடுவதால் இந்த திட்டத்தை கையாண்டுள்ளனர். புலி இந்த கால்நடையை வேட்டையாட வரும் போது அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக 4 இடங்களில் பரண் அமைத்து கால்நடை மருத்துவர், துப்பாக்கி ஏந்திய வனகாவலர், T23 புலியை பற்றி தெரிந்த வன வழிகாட்டி என தலா 3 பேர் பதுங்கியுள்ளனர். 50 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்ட நிலையில், ஒன்றில் கூட T23 புலியின் நடமாட்டம் நேற்று மாலை வரை பதிவாகவில்லை. அதேசமயம் இரண்டு குட்டிகளுடன் 7 புலிகள் இந்த சிங்காரா வனப்பகுதி வழியாக கடந்து சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Must Read : மசினக்குடி புலிக்கு ஏன் MT23 என பெயர் வைத்தார்கள்?.. அதை பிடிக்க ஏன் இவ்வளவு போராட்டம்

    தமிழகம் முழுவதும் உள்ள புலிகள் காப்பகங்களில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தும்போது அந்த புலிகளுக்கு எண்கள் கொடுக்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் முதுமலை புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள புலிகளில் ஒன்றுதான் 13 வயதுடை இந்த T23 புலி. கால்நடைகளையும், மனிதர்களையும் கொன்றதால் அந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து போரடி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: