ஊராட்சி மன்ற தலைவர் களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்படும் என தமிழக சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கான புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி, 2097 கோடி மதிப்பில் ஊரக சாலைகள் மேம்படுத்துதல் மற்றும் மேம்பாலங்கள் கட்டப்படும்.
12,125 நூலங்கங்கள் படிப்படியாக மேம்படுத்தப்படும். 233 கோடி மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டடங்கள், கிராம ஊராட்சி கட்டங்கள் கட்டி முடிக்கப்படும்.
சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கப்படும். பெண் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு அதிகரித்து வழங்கப்படும். சிறப்பாக செயல்படும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்படும்.
இயற்கை வளங்களை பாதுகாக்க உள்ளூர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். பாதுகாக்கப்பட்ட குடிநீரை உறுதி செய்யும் பொருட்டு நீரின் தரத்தை பரிசோதிப்பதற்காக சுய உதவி குழு பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். 5000 மகளிர் விவசாயிகளை உள்ளடக்கிய 50 இயற்கை பண்ணை தொகுப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக மற்றும் நகரப் பகுதிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்ட உடன் மாவட்ட திட்டக்குழுக்கள் அமைக்கப்படும் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட திட்டக் குழு என்ற அமைப்பினை ஏற்படுத்திட 74வது இந்திய அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்,1992ல் வழிவகுத்துள்ளது என்றும், அதன்படி, மாவட்ட திட்டக் குழு 36 மாவட்டங்களிலும் அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட திட்டக்குழுவின் தலைவராக மாவட்ட ஆட்சித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விகிதாச்சாரத்திற்கு ஏற்ப ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
Must Read : தமிழகத்தில் 6 புதிய மாநகராட்சிகள்: தமிழக அரசு அறிவிப்பு!
இந்த குழுவானது, மாவட்டத்தின் தேவைகளையும், பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஒன்றிணைக்கப்பட்டு ஏற்படுத்தப்பட்ட திட்டத்தினையும் அடிப்படையாக கொண்டு செயல்படும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அந்த வகையில், எதிர்வரும் ஊரக மற்றும் நகரப் பகுதிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பெற்றவுடன் மாவட்ட திட்டக்குழுக்கள் அமைக்கப்படும் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.