கொரோனாவுடன் கைகோர்த்து பரவும் டெங்கு - எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்கள்

கோப்புப் படம்

கொரோனா தொற்று பரவல் தமிழகம் முழுவதும்  தொடர்ந்து வந்தாலும் தமிழகத்தில் மழைக்கால தொற்று காய்ச்சல்களும் பரவ தொடங்கியுள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
எலிகளால் பரவ கூடிய எலிக்காய்ச்சல், கொசுவால் பரவக்கூடிய டெங்கு போன்ற நோய்கள் மற்றும் தண்ணீர் சுத்தம் இன்மையால் பரவ கூடிய நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளன. அதனை தடுக்க தமிழக சுகதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

காய்ச்சல், டெங்கு அறிகுறிகளுடன் வருவோருக்கு ரத்த பரிசோதனை செய்ய வேண்டும், அரசு மற்றும் மாவட்ட நிர்வாக கட்டிடங்களில் தேவையில்லாத பொருட்கள் சேர்வதையும் தண்ணீர் தேங்கி இருப்பதையும் சுத்தம் செய்ய வேண்டும், மக்கள் கூடும் இடங்களில் நிலவேம்பு கசாயம் குடிக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும், டெங்கு கொசு உற்பத்தி இருக்கும் இடங்களை உடனே கண்டறிந்து அந்த பகுதி மற்றும் சுற்றியுள்ள இடங்களை உடனே கிருமி நாசினி கொண்டு தூய்மை செய்ய வேண்டும் என பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், பொதுமக்களும் தங்கள் வீடுகளை சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.Also read... பூகம்பம் கூட ஏற்படலாம் ஆனால் அதிமுகவில் எந்த பிளவும் ஏற்படாது - அமைச்சர் ஜெயக்குமார்

காய்ச்சிய தண்ணீரை குடித்தல், வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுதல், குடிநீர் தண்ணீர் தொட்டிகளை பிளிச்சிங் பவுடர் கொண்டு வாரம் ஒரு முறை சுத்தம் செய்தல் போன்றவையுடன் முககவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற தற்காப்பு சுத்த முறைகளை தொடர்ந்து வந்தால் பருவகால தொற்று மற்றும் கொரோனா நோயிலிருந்து தற்காத்து கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்
Published by:Vinothini Aandisamy
First published: