ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரயில்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பித் தரும் பணி தொடங்கியது

ரயில்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பித் தரும் பணி தொடங்கியது

பணம் திருப்பித் தரும் பணி தொடங்கியது

பணம் திருப்பித் தரும் பணி தொடங்கியது

நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ரத்தான ரயில்களில் பயணம் செய்ய ஆன்லைன் இல்லாமல் நேரடியாக ரயில்வே கவுண்டர்களில் முன்பதிவு செய்தவர்களுக்கான  பணம் இன்று முதல் திரும்ப தரப்படப்படுகிறது. 

கடந்த மார்ச் 22 முதல் வரும் ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதால். இந்த நேரத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் தங்கள் பணத்தை திரும்ப பெற கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை படி ரயில்வே கவுண்டர்களில் சென்று தங்கள் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று தெற்கு  ரயில்வே தெரிவித்திருந்த நிலையில் முன்பதிவு பணத்தை பெற்றுக் கொள்ளவதற்காக மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

ஜூன் 30- ஆம் தேதி வரை ரத்தான ரயில் டிக்கெட்டுக்கான பணத்தைத் திரும்ப பெற இன்று முதல் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை கோட்டத்திற்குட்பட்ட முன்பதிவு மையங்களில் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். காலை 10.00 மணிமுதல் மாலை 05.00 மணிவரை 19 மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளது.

சென்ட்ரல், எழும்பூர், கடற்கரை, மைலாப்பூர், மாம்பலம், செயின்ட் தாமஸ் மவுண்ட், தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், பெரம்பூர், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, வாலாஜாபாத் சாலை, ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டது.

Journey Commencement Date Date of Refund at PRS counters

Upto 31.03.2020 From 05.06.2020 onwards

01.04.2020 to 14.04.2020 From 12.06.2020 onwards

15.04.2020 to 30.04.2020 From 19.06.2020 onwards

01.05.2020 to 15.05.2020 From 26.06.2020 onwards

16.05.2020 to 31.05.2020 From 03.07.2020 onwards

01.06.2020 to 30.06.2020 From 10.07.2020 onwards

மேலும், இந்த தேதிகளில் பணத்தை திரும்ப பெற முடியாதவர்கள் பயணத்தேதியில் இருந்து 180 நாட்களுக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 5 கவுண்டர்கள் திறக்கப்பட்டு முறையாக சமூக தனிமனித இடைவெளி கடைபிடித்து வருபவர்களுக்கு இந்த விருதை பிரச்சினைகளும் இல்லாமல் முன்பதிவு பணங்கள் திரும்ப தரப்பட்டு வருகிறது.

Also read... ”கொரோனா கார்ட்டூன் இல்லையே” - புலம்பெயர் தொழிலாளர்களை சிரிக்க வைத்த முதலமைச்சர் நாராயணசாமி


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Railway