தெற்கு ரயில்வேயில் எத்தனை தனியார் ரயில்கள் இயங்கும்?

151 பயணிகள் ரயில்கள் மற்றும் 109 வழித்தடங்களை தனியாருக்கு விட விண்ணப்பங்கள் கோரி ரயில்வே அமைச்சகம் டெண்டர் வெளியிட்டுள்ளது. 

தெற்கு ரயில்வேயில் எத்தனை தனியார் ரயில்கள் இயங்கும்?
கோப்புப்படம்
  • Share this:
151 பயணிகள் ரயில்கள் மற்றும் 109 வழித்தடங்களை தனியாருக்கு விட விண்ணப்பங்கள் கோரி ரயில்வே அமைச்சகம் டெண்டர் வெளியிட்டுள்ளது. 

தெற்கு ரயில்வேயில், தமிழகம்,கேரளாம் மற்றும் ஆந்திராவில், 13வழித்தடங்களில், 26 ரயில்கள் இயக்கஅனுமதிக்கப்பட உள்ளது.

இந்த ரயில்களை,இரு வழிகளில் தினமும் இயக்கவும், வாரத்தில்,ஒரு நாள், இரண்டு நாள் மற்றும் மூன்று நாட்கள்இயக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.


இரு வழி ரயில்கள்:

சென்னை - மதுரை

புதுச்சேரி - செகந்திராபாத் (வழி சென்னை)சென்னை - கோவைதிருநெல்வேலி

திருச்சி - சென்னை

கன்னியாகுமரி - சென்னை

கன்னியா குமரி - எர்ணாகுளம்

சென்னை - புதுடில்லி

சென்னை - ஹவுரா

இதே போல் தினசரி ரயில் இயக்க, தனியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மங்களூர் - சென்னைக்கு வாராந்திர ரயில், சென்னை - மும்பைக்கு வாரம் இருமுறை, கொச்சுவேலி கவுஹாத்தி இடையே வாரத்தில் மூன்று நாட்கள் என, 13 வழித்தடங்களில் ரயில்கள் இயக்க ரயில்வே அமைச்சகத்தால் அனுமதி அளிக்கப்பட உள்ளது.

35 ஆண்டுகளுக்கு தனியாருக்கு லைசென்ஸ் தரப்படும். தனியார் ரயில்களே கட்டணம் நிர்ணயம் செய்துகொள்ள முடியும்
ரயில் டிரைவரும் கார்டும்  மட்டும் ரயில்வே ஊழியர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் தனியார் ஊழியர்களாக இருப்பார்கள்.
தனியார் ரயில்கள் நவீன தொழில்நுட்ப வசதியுடன் வடிவைக்கப்படும்.

Also read... கோவாவில் மீண்டும் தொடங்கிய சுற்றுலா சேவை - கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்

16 பெட்டிகளுடன் 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் தனியார் ரயில்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது
தனியார் மூலம் நவீன ரயில்கள் கிடைத்தாலும் கட்டணம் அதிகம் என்பதால் ரயில் பயணிகள் கவலையடைந்துள்ளனர்.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading