அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து படிப்படியாக விலகி வருவதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் இது முற்றிலுமாக விடைபெறும் என்றும் கூறினார்.
அதேவேளையில், வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் அதையொட்டியுள்ள தெற்கு ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கூறினார்.
சென்னை சுற்றுவட்டாரத்தில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறிய புவியரசன், வரும் 17, 18-ம் தேதிகளில் மன்னார் வளைகுடா, குமரிக் கடல், லட்சத்தீவுகள் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 8 சென்டிமீட்டரும், தொண்டியில் 7 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியிருப்பதாக புவியரசன் கூறினார்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.