தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!

மாதிரிப் படம்

நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மன்னார் வளைகுடா பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்க கடலில் உருவான 'புரெவி' புயல் வலுவிழந்து, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக்கொண்டுள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது.

    Also read... அமைச்சர் தங்கமணி வீட்டை முற்றுகையிடுவோம் - டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

    குறிப்பாக நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்த 2 தினங்களுக்கு மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    மன்னார் வளைகுடா அருகே நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 18 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்து மன்னர் வளைகுடாவில் நிலைகொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சனியன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

     



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: