கிருஷ்ணகிரியில் பலத்த காற்றுடன் கனமழை... மரங்கள் முறிந்து விழுந்தன

கிருஷ்ணகிரியில் பலத்த காற்றுடன் கனமழை... மரங்கள் முறிந்து விழுந்தன

மாதிரிப் படம்

கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் பல்வேறு பகுதிகளில் பெயர் பலகைகள், மரங்கள் முறிந்து விழுந்தன.

 • Share this:
  கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் பல்வேறு பகுதிகளில் பெயர் பலகைகள், மரங்கள் முறிந்து விழுந்தன. புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள இஸ்லாமியர்களின் தொழுகை கூடம் சரிந்து விழுந்தது. இதில், 60 வயதனான ஜாபர் என்பவர் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அத்துடன் இன்று முதல் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நேற்று வேலூர், திருத்தணி, பாளையங்கோட்டை உட்பட 9 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது. இந்நிலையில், மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களில் இன்றும், நாளையும் இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

  மேலும் படிக்க... உங்களது வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி?

  குறிப்பாக, மதுரை, திருச்சி, திண்டுக்கல், கரூரில் அனல்காற்றுடன் வெயில் கொளுத்தும் என்றும் தெரிவித்துள்ளது. எஞ்சிய மாவட்டங்களில் 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: