ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

மழை

மழை

தமிழகம் முழுவதும் லேசானது முதல் மிதமான மழையே பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்துவரும் நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வட கிழக்கு பருவமழை காரணமாக இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தமிழகம் முழுவதும் பல்வேறு மாட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 44 செ.மீ மழை பெய்தது. இதன் பிறகு தமிழகம் முழுவதும் லேசானது முதல் மிதமான மழையே பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்தது.

    தற்போது தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறித்துத்துள்ளது.

    மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Published by:Raj Kumar
    First published:

    Tags: MET, MET warning, Rain Update, Weather News in Tamil