ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அடுத்த 3 மணி நேரம் இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த 3 மணி நேரம் இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

மழை

மழை

Weather update | கோவை, திண்டுக்கல், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்துவரும் நிலையில், தற்போது மழை தீவிரமடைந்து வருகிறது.

    தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டத்தில் மிதமான மழையும், 17 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து வானிலை மையம் வெளீயிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, திண்டுக்கல், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    Also Read : பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் பின்பற்றவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

    மேலும், நீலகிரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

    Published by:Raj Kumar
    First published:

    Tags: MET, MET warning, North east monsoon rain, Rain Update