கடலோர மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்

கடலோர மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்

வெப்பம் அதிகரிப்பு

கடலோர மாவட்டங்களில் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும் என்றும் இதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    இது குறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விதர்பா முதல் கேரளா வரை 1 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்ற, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

    மே 5 நானை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, சேலம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

    மே 6 ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

    மே 7 ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

    மே 8 ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

    கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH-Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH-Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.

    கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்):

    கொடுமுடி (ஈரோடு), உத்தமபாளையம் (தேனி) தலா 5, போடிநாய்க்கனுர் (தேனி), எருமைப்பட்டி (நாமக்கல்), திருவாடானை (ராமநாதபுரம்), பெரியார், கயத்தாறு (தூத்துக்குடி) தலா 4, ராதாபுரம் (திருநெல்வேலி), திருபுவனம் (சிவகங்கை), பர்லியார் (நீலகிரி) தலா 3 ,குளச்சல் (கன்னியாகுமரி), வாடிப்பட்டி (மதுரை) தலா 2, புதுக்கோட்டை ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர), சோலையார் (கோவை) தலா 1.

    Must Read : மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 8 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருட்டு

     

    மீனவர்களுக்கான எச்சரிக்கை :

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள, கர்நாடக கடற்பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.” இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் நா. புவியரசன் தெரிவித்துள்ளார்.
    Published by:Suresh V
    First published: