Home /News /tamil-nadu /

தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்!

மாதிரி படம்

மாதிரி படம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களின் ஒருசில இடங்களில், இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    நாளை கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    Also read... படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு - கிழக்கு கடற்கரை சாலையில் மீனவர்கள் மறியல்!

    இன்று முதல் வரும் 3ம் தேதி வரை குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    Also read... அதிகரிக்கும் கொரோனா: பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் - ராமதாஸ்

    சென்னை நகரின் பல பகுதிகளில் இன்று மதியம் பரவலாக மழை பெய்தது. காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென மழை பெய்தது. வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Meteorological dept, Rain Update

    அடுத்த செய்தி