Home /News /tamil-nadu /

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு... மீனவர்களுக்கும் எச்சரிக்கை...!

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு... மீனவர்களுக்கும் எச்சரிக்கை...!

கோப்புப்படம்

கோப்புப்படம்

வங்கக் கடலில் பலத்த காற்று வீசுவதால் குமரி, மாலத்தீவு மற்றும் தென் தமிழக கரையோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் புவியரசன் அறிவுறுத்தினார்.

  • News18
  • Last Updated :
    தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உட்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்தார்.

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என்றார்.

    வேலூர், அரியலூர், பெரம்பலூர் உட்பட 15 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என்றும் மதுரை, தேனி உட்பட 9 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும் என்றும் அவர் கூறினார்.

    வங்கக் கடலில் பலத்த காற்று வீசுவதால் குமரி, மாலத்தீவு மற்றும் தென் தமிழக கரையோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் புவியரசன் அறிவுறுத்தினார்.

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கடந்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளதாகவும், திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரத்தில் அதிகபட்சமாக 16 சென்டி மீட்டர் மழை பதிவாகியிருப்பதாகவும் புவியரசன் தெரிவித்தார்.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Weather Update

    அடுத்த செய்தி