நாளை தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு... வானிலை மையம்

நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு... வானிலை மையம்
கோப்புப் படம்
  • Share this:
மழை தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக வட கடலோர மாவட்டங்கள், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் காரைக்காலில் ஒரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, வேலூர் உட்பட 17 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Also read... ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம் வினியோகம் எப்போது...? அமைச்சர் காமராஜ் தகவல்


சூறாவளிக் காற்று மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் தென்கிழக்கு வங்க கடல், அந்தமான் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தென் தமிழக கடலோர பகுதியில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணி முதல் கடல் அலை மூன்று புள்ளி 7 மீட்டர் வரை உயரக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading