• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மணமகனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதால் திருமணம் நிறுத்தம்

மணமகனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதால் திருமணம் நிறுத்தம்

டெங்குவால் பாதிக்கப்பட்ட மணமகன்

டெங்குவால் பாதிக்கப்பட்ட மணமகன்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன்பத்தை கிராமத்தில் மணமகனுக்கு டெங்கு காய்சல் ஏற்பட்டதால் அவரது திருமணம் நிறுத்தப்பட்டது

  • News18
  • Last Updated :
  • Share this:
புதுக்கோட்டை அருகே மணமகனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதால் நேற்று நடைபெறவிருந்த திருமணம் நின்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன்பத்தை கிராமத்தைச் சேர்ந்தவர் வர்ணமேகம். இவரது மகன் இளங்கோவன் (எ) பாண்டியன். இவருக்கும் கறம்பக்குடியைச் சேர்ந்த பெரியய்யாவின் மகள் பெரியநாயகி (எ) ஜீவிதா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. மேலும் உறவினர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்தனர்.

இந்நிலையில் கடந்த 7 நாட்களுக்கு முன்பு பாண்டியனுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து பாண்டியன் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாண்டியனுக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் மருத்துவர்கள் பாண்டியனை மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் படி அறிவுறுத்தியுள்ளனர்.



இந்நிலையில் திருமணத்திற்கு சில நாட்களே இருந்ததால் அவரை உறவினர்கள் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் திருமணம் நடைபெறும் நாட்களுக்குள் பாண்டியன் குணம் ஆகி விடுவார் என்ற நம்பிக்கையில் கறம்பக்குடி அருகே புதுப்பட்டியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பாண்டியன் ஜீவிதா திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றது.  ஆனால் பாண்டியனின் உடல் நிலை சரியாகவில்லை. திருமண அழைப்பிதழ் பெற்ற உறவினர்கள் அனைவரும் நேற்று காலையில் இருந்தே திருமண மண்டபத்திற்கு வர தொடங்கினர். ஆனால் பாண்டியனுக்கு காய்ச்சல் குணமாகாததால் அவரை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை. இதனை அடுத்து நேற்று நடைபெறவிருந்த பாண்டியன் ஜீவிதாவின் திருமணம் நிறுத்தி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து திருமணத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட உணவுகள் அப்படியே இருந்துள்ளது. இதனால் மணமகன் பாண்டியனின் தம்பி மணிகண்டன் என்பவருக்கு திடீரென்று காதணி விழாவை பாண்டியன் குடும்பத்தினர் நடத்தி உணவுகளை உறவினர்களுக்கு பரிமாறியுள்ளனர்.

மணமகனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு திருமணம் நின்று போன சம்பவம் கறம்பக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: