கிருஷ்ணகிரியில் இறந்த யானையின் உடலில் தந்தம் திருடியவர் கைது

கிருஷ்ணகிரியில் இறந்த யானையின் உடலில் தந்தம் திருடியவர் கைது
யானையின் தந்தத்தை திருடியவர்
  • News18
  • Last Updated: July 22, 2020, 9:04 PM IST
  • Share this:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்த ஆண் யானையின் தந்தங்களை திருடிய நபர் இரு தந்தகளுடன் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் உரிகம் வனச்சரகத்தில் கடந்த 16ஆம் தேதி 20 வயது ஆண் யானை ஒன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. யானையின் உடலில் தந்தங்கள் மட்டும் அகற்றப்பட்டிருந்தது.

இதன் காரணமாக தந்தந்திற்காக யானை கொல்லப்பட்டதாக அப்பகுதியில் வசிக்கும் பலரும் சந்தேகம் எழுப்பினர். இந்த நிலையில் யானை தந்தத்திற்காக கொல்லபப்ட்டவில்லை என்றும்  யானையின் உடலிலும், உடல் கிடந்த இடத்தை சுற்றியும் வேட்டையாடப்பட்ட தடயம் ஏதும் இல்லை என்றும் வனத்துறை விளக்கமளித்திருந்தது.


இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தர்மபுரி கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷ் தெரிவிக்கையில் "உடற்கூராய்வு பரிசோதனையிலும் யானை உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. யானையின் உடல் இருந்த இடம் மிகவும் அடர்வனம், கர்நாடக மாநில எல்லையையொட்டியுள்ளது.

சமீப காலமாக இங்கு மேய்ச்சலுக்காக பலரும் வருகின்றனர்.
ரோந்துப் பணியில் இருக்கு வனத்துறையினர் அவர்களை விசாரிக்கின்றனர்.மேலும் அடர்வனங்களில் கூட வேட்டைத்தடுப்பு முகாம்கள் அமைப்பதை அதிகரித்துள்ளோம். அப்படி ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த தமிழக வனத்துறையினரால்தான் யானையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. யானையின் தந்தங்கள் உருவி எடுக்கப்பட்டுள்ளது.

Also read... தடை செய்யப்பட்ட சீன செயலிகளை பயன்படுத்தினால்...! தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சகம் விடுத்த எச்சரிக்கை

இதுதொடர்பாக வனவுயிர் பாதுகாப்புச் சட்டப் பிரிவு 9 தந்தங்களை எடுத்தது, பிரிவு 39 அரசாங்க சொத்தை அனுமதியின்றி கைப்பற்றியது, பிரிவு 44 தந்தங்களை வெற்றிச் சின்னமாக பயன்படுத்த முயன்றது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு காவல்துறையினர், கர்நாடக வனத்துறை மற்றும் காவல்துறையினருடன் இணைந்து தந்தங்களை திருடியவர்களை தேடி வருகிறோம். விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள்" என்றும்  கூறினார்.

குற்றவாளியை கண்டுபிடிக்க 3 தனிப்படை அமைத்து தேடியதில் கர்நாடக காவல் துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில்  ஈரணம்தொட்டியைச் சேர்ந்த 47 வயதான தம்மண்ணா என்பவரை தமிழக வனத்துறையினர்  கைது நேற்றிரவு கைது செய்தனர். அவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் திருடப்பட்ட தந்தந்தங்களும் கைப்பற்றப்பட்டது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஓசூர் வன உயிரினக்காப்பாளர் பிரபு "விரைந்து நடவடிக்கை எடுத்ததன் அடிப்படையில் குற்றவாளியை கைது செய்துள்ளோம். இவருக்கு இது முதல் குற்ற சம்பவமா அல்லது ஏற்கெனவே தமிழ்நாட்டில் நடந்த பிற யானை தந்த குற்றங்களுடன் இவருக்கு தொடர்பிருக்கிறதா என்ற அடிப்படையிலும் விசாரித்து வருகிறோம்" என்று கூறினார்.
First published: July 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading