டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி - பதில் தராவிட்டால் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை என எச்சரிக்கை!

டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி - பதில் தராவிட்டால் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை என எச்சரிக்கை!

மதுரை உயர் நீதிமன்றம்

வெளிமாநில பல்கலைக்கழகங்களில் தொலைதூர கல்வியில் தமிழ்வழியில் படித்து ஒதுக்கீட்டின் மூலம் வேலைக்கு சேர்ந்தவர்கள் எத்தனை பேர், கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று கல்வி கற்று தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்கள் எத்தனை பேர்? என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  டிஎன்பிஎஸ்சி நியமனம் குறித்த நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றால் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு பரிந்துரைக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.

  டிஎன்பிஎஸ்சி குரூப் 1 நியமனத்தில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் தொலைநிலை கல்வியில் தமிழ் பயின்றவர்களை தவிர்த்து, கல்லூரிக்குச் சென்று பட்டம் பெற்றவர்களை மட்டும் கொண்டு குரூப் 1 நியமனத்தை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

  இந்த வழக்கு விசாரணையின் போது, வெளிமாநில பல்கலைக்கழகங்களில் தொலைதூர கல்வியில் தமிழ்வழியில் படித்து ஒதுக்கீட்டின் மூலம் வேலைக்கு சேர்ந்தவர்கள் எத்தனை பேர், கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று கல்வி கற்று தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்கள் எத்தனை பேர்? என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

  Also read... கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் விருப்பப்பாடமாக மட்டும் இருப்பதை ஏற்கமுடியாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி..

  இகுறித்து தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்கவில்லை என்றால் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு பரிந்துரைக்க நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை டிசம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: