ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு.. சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு.. சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

ஆதார்

ஆதார்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கவுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வற்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரிய மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் வாடகை வீட்டுதாரர்களின் ஆதார் எண்ணை இணைத்தால், அவர்கள் காலி செய்த பின், புதிதாக வாடகைக்கு வருவோரின் ஆதார் இணைப்பை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிவித்திருந்தார்.

ஆதார் இணைப்பு சமூக நலத் திட்ட பயன்களை பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்துவதாகவும் எனவே மின் கட்டண மானியம் பெற ஆதாரை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.

விசாரணையின்போது இதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு, வாடகைதாரர்கள் மானியம் பெறும் விவகாரமானது உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் இடையிலான பிரச்னை எனவும், மீட்டர் அடிப்படையில்தான் ஆதார் இணைக்கப்படும் எனவும் தெரிவித்தது. மேலும் அனைத்து ஒப்புதல்களையும் பெற்ற பிறகே ஆதார் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கவுள்ளனர்.

First published:

Tags: Aadhar