Home /News /tamil-nadu /

போலீஸ் பாதுகாப்பை தவறாக பயன்படுத்தியதாக ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி

போலீஸ் பாதுகாப்பை தவறாக பயன்படுத்தியதாக ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம், தனது பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட போலீஸ் உதவியுடன், ஆயுதங்களுடன் சென்று தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.  

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தனக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை தவறாக பயன்படுத்தியதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜா ராம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.அதில், கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம், தனது பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட போலீஸ் உதவியுடன், ஆயுதங்களுடன் சென்று தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கியுள்ள போலீஸ் பாதுகாப்பை அவர் தவறாக பயன்படுத்தியுள்ளார் என்றும்,  தனி பாதுகாப்பு போலீசாரின் உதவியுடனேயே அதிமுக அலுவலகத்தில் ஆவணங்களை கொள்ளையடித்து சென்றார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    முன்னாள் முதல்வரான பன்னீர்செல்வம், தற்போது அரசிலும், கட்சியிலும் எந்த பொறுப்பிலும் இல்லை எனவும், அவருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாத நிலையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Read more: இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவு - அமைச்சர் செந்தில் பாலாஜி

    அதேபோல், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்ட போலீசார் மற்றும் பாதுகாப்பை தவறாக பயன்படுத்திய ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், எந்த முகாந்திரமும் இல்லாமல், ஆதாரமற்ற குற்றச்சாட்டுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி மனுவை  தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
    Published by:Srilekha A
    First published:

    Tags: ADMK, Chennai High court, O Pannerselvam

    அடுத்த செய்தி