வேறு ஒருவருடன் தொடர்பு; கள்ளக்காதலியின் கையைத் துண்டாக வெட்டிய காதலன்! கோவையில் பரபரப்பு

வீட்டுச் செலவுக்கு சுஜாதா பணம் கேட்க தங்கராஜ் மறுத்துள்ளார்; இதனால் இருவருக்கும் வாய்ச்சண்டை ஏற்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: July 30, 2019, 10:25 PM IST
வேறு ஒருவருடன் தொடர்பு; கள்ளக்காதலியின் கையைத் துண்டாக வெட்டிய காதலன்! கோவையில் பரபரப்பு
வீட்டுச் செலவுக்கு சுஜாதா பணம் கேட்க தங்கராஜ் மறுத்துள்ளார்; இதனால் இருவருக்கும் வாய்ச்சண்டை ஏற்பட்டுள்ளது.
Web Desk | news18
Updated: July 30, 2019, 10:25 PM IST
கள்ளக்காதலி வேறொரு நபருடன் தொடர்பு வைத்திருந்ததால் அவரது கையைத் துண்டாக வெட்டியுள்ளார் காதலன். இந்தக் கொடூரச் சம்பவம், கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை அருகே உள்ள சின்ன தொட்டிபாளையம் எம்.ஜி.ஆர் காலனியைச்சேர்ந்தவர் 30 வயதான சுஜாதா. திங்களன்று மாலை 6 மணியளவில், அவரது வீட்டில் இருந்து ஒரு நபர் வெளியே தலைதெறிக்க ஓடினார்.

சில நொடிகளில் துண்டான கையுடன் சுஜாதா வெளியில் வந்து கதறி அழுது ஓலமிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் பார்த்தபோது சுஜாதாவின் இடது மணிக்கட்டில் இருந்து துண்டிக்கப்பட்டு ரத்தம் கொட்டியது. பதறிய அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று அனுமதித்தனர்.


பின்னர் காரமடை போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். அதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சுஜாதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போதுதான் அவரது கை துண்டிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி தெரியவந்தது

சுஜாதாவுக்கும் பிரபு என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு தண்டவாளத்தைக் கடந்தபோது ரயில் மோதி பிரபு உயிரிழந்தார்

அதன்பின் குடும்ப செலவுகளுக்காக காரமடை பகுதியில் கட்டிட வேலைகளுக்கு சென்று வந்துள்ளார் சுஜாதா. அப்போது காரமடையைச் சேர்ந்த 30 வயதான திருமணமாகாத தங்கராஜ் என்பவருடன் சுஜாதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது

Loading...

நாளடைவில் சுஜாதா - தங்கராஜ் பழக்கம் கள்ளக்காதலாக மாறியது; சுஜாதா வீட்டிற்கு தங்கராஜ் அடிக்கடி வந்து செல்லத் தொடங்கினார். தங்கராஜிடம் இருந்து அவ்வப்போது வீட்டுச் செலவுகளுக்கு பணம் வாங்கிக் கொண்டுள்ளார் சுஜாதா.

இந்த நிலையில் வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு அவரிடமும் பணம் வாங்கத் தொடங்கினார் சுஜாதா. இதையறிந்த தங்கராஜுக்கு ஆத்திரம் ஏற்பட்டது; ஆனால் சுஜாதா உடனான பழக்கத்தையும் அவரால் விடமுடியவில்லை. சுஜாதா மீது கடுங்கோபத்தில் இருந்த தங்கராஜ், திங்களன்று மாலை 6 மணியளவில் சுஜாதா வீட்டிற்கு சென்றார்

அப்போது வீட்டுச் செலவுக்கு சுஜாதா பணம் கேட்க தங்கராஜ் மறுத்துள்ளார்; இதனால் இருவருக்கும் வாய்ச்சண்டை ஏற்பட்டுள்ளது. "நீ பணம் கொடுக்காவிட்டால் யாரிடம் பணம் கேட்க வேண்டும் என எனக்குத் தெரியும்" என்று சுஜாதா சொன்னதால் தங்கராஜ் கடும் கோபமடைந்துள்ளார்

அப்போது, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சுஜாதாவின் கழுத்தில் வெட்ட தங்கராஜ் முயன்றுள்ளார். அப்போது சுஜாதா அலறியபடியே இடது கையால் தடுத்துள்ளார்; தங்கராஜ் வேகமாகக் கத்தியால் தாக்கியதில் இடது கையின் மணிக்கட்டில் இருந்து துண்டாகி விழுந்தது. இதையடுத்து தங்கராஜ் கத்தியைப் போட்டு விட்டு வீட்டில் இருந்து வெளியே தப்பி ஓடி விட்டார்.

தங்கராஜ் மீது பெண் வன்கொடுமை, கொலை முயற்சி உள்ளி்ட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காரமடை போலீசார், தலைமறைவான அவரைத் தேடி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் காதலியின் கையை காதலனே துண்டாக வெட்டிய சம்பவம், மேட்டுப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also see:
First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...