முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அரசுச் செயலர்களுக்கு நான் அனுப்பிய கடிதம் அவசியமற்ற விவாதப் பொருளாக மாறியிருக்கிறது: தலைமைச் செயலர்

அரசுச் செயலர்களுக்கு நான் அனுப்பிய கடிதம் அவசியமற்ற விவாதப் பொருளாக மாறியிருக்கிறது: தலைமைச் செயலர்

தலைமை செயலாளர் இறையன்பு

தலைமை செயலாளர் இறையன்பு

அலுவல் ரீதியாக துறை செயலர்களுக்கு நான் அனுப்பிய கடிதம் அவசியமற்ற விவாதப் பொருளாக மாறியிருக்கிறது என தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழக அரசின் பல்வேறு சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து ஆளுநருக்கு விளக்கம் தரும் வகையில், விளக்கக் காட்சிகளைத் தயாரிக்குமாறு அனைத்து துறை செயலர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில், தமிழகத்தில் உள்ள சில துறைகளின் செயல்பாடுகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் தற்போதைய நலத்திட்டங்கள் குறித்து ஆளுநர் அறிய விரும்புவதாகவும். இதுகுறித்து ஆளுநரிடம் தெரிவிக்க சம்பந்தப்பட்ட துறைகளின் செயலாளர்கள் தயாராக வேண்டும் எனவும், துறை சார்ந்த தரவுகளை தயார் செய்யுமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, பன்வாரி லால் புரோஹித் ஆளுநராக இருந்தபோது, மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டம் நடத்தியது பேசுபொருளான நிலையில், தற்போதைய ஆளுநர் ஆர் என் ரவி, அரசின் திட்டங்கள் பற்றிய விவரங்களை கேட்டிருப்பது மீண்டும் பேசு பொருளானது.

இந்நிலையில், அலுவல் ரீதியாக துறை செயலர்களுக்கு நான் அனுப்பிய கடிதம் அவசியமற்ற விவாதப் பொருளாக மாறியிருக்கிறது என தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அலுவல் ரீதியாக துறையின் செயலாளர்களுக்கு நான் அனுப்பிய ஒரு கடிதம் அவசியமற்ற ஒரு விவாதப் பொருளாக மாறி இருப்பதாக அறிகிறேன்.

தமிழ்நாட்டுக்கு மாண்புமிகு ஆளுநர் அவர்கள் புதிதாக பொறுப்பேற்றுள்ளார்கள். அவர்களுக்கு தமிழக அரசின் பல்வேறு சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து தெரிவிக்கும் வகையில் அதற்கான தரவுகளைத் திரட்டி வைத்துக் கொள்ளுமாறு அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் அலுவல் ரீதியான ஒரு கடிதம் அனுப்பி வைத்துள்ளேன்.

திட்டங்கள், செயலாக்கங்கள் குறித்து இதுபோல் தகவல்களை திரட்டி வைத்துக் கொள்ள அறிவுறுத்துவது நிர்வாகத்தில் வழக்கமானது தான். அதனை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக ஆக்குவது சரியானது அல்ல. அரசின் நிர்வாகச் செயல்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு இது வழக்கமான நடைமுறைகளில் ஒன்று தான் என்பது தெரியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Chief Secretary, Iraianbu IAS