• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வேலூரில் தண்ணீர் மற்றும் உணவு தேடி வழிதவறி வந்த சிறுத்தை குட்டி உயிரிழப்பு! வனத்துறை விசாரணை

வேலூரில் தண்ணீர் மற்றும் உணவு தேடி வழிதவறி வந்த சிறுத்தை குட்டி உயிரிழப்பு! வனத்துறை விசாரணை

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு சித்திக்சாரா மலைப்பகுதியில் சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share this:
    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பேரணாம்பட்டு அருகே உள்ள கள்ளிச்சேரி கிராமம் அருகில் குடியிருப்புகளுக்கு பின் புறம் அமைந்துள்ள மலை பகுதியில் இன்று காலை இயற்கை உபாதை கழிக்க சென்ற பொதுமக்கள் சிறுத்தை குட்டி ஒன்று இறந்து சடலமாக கிடந்தது குறித்து பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக பேரணாம்பட்டு வனத்துறையினர் விரைந்து சென்று இறந்து கிடந்த குட்டி ஆண் சிறுத்தையின் சடலத்தை கைப்பற்றினர். பின்னர் வேலூர் மாவட்ட வன அதிகாரி பார் கவதேஜா, மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா கால்நடை மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.



    இதனையடுத்து உதவி வன பாதுகாவலர் முரளிதரன் முன்னிலையில் வண்டலூர் உயிரியல் பூங்கா கால் நடை மருத்துவர் டாக்டர் பிரதீப் மற்றும் மருத்துவ குழுவினர் அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர்.

    தாய் சிறுத்தையிடம் இருந்து வழி தவறி தண்ணீர் உணவு தேடி சிறுத்தை வந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பேர்ணாம்பட்டு வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: