500 ஏக்கர் பரப்பளவு, 20 ஆயிரம் வேலைவாய்ப்பு... கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமையும் பிரம்மாண்ட ஒலா தொழிற்சாலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமையும் பிரம்மாண்ட ஒலா நிறுவனம்

500 ஏக்கரில் அமைந்துள்ள தொழிற்சாலையில் 100 ஏக்கர் அளவில் மரங்கள் வளர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.

 • Share this:
  உலகின் மிகப்பெரிய மின்சார இருசக்கர வாகன தொழிற்சாலை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுத்த சில மாதங்களில் உற்பத்தியை தொடங்க உள்ளது. ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான மின்சார இருசக்கர வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள பிரமாண்ட தொழிற்சாலையைப்பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு

  இந்தியாவில் கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓலா நிறுவனம், 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பில் உலகிலேயே மிகப்பெரியதாக மின்சார இருசக்கர வாகன தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டது. இதன்படி கடந்தாண்டு டிசம்பரில் கிருஷ்ணகிரி அருகே 500 ஏக்கர் தொழிற்சாலையை அமைக்க தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

  Also Read : பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியால் மத்திய அரசுக்கு எவ்வளவு வருவாய் தெரியுமா?

  2021 ஜனவரியில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவுற்று, போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் 500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரியில் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த 3 மாதங்களில் முதற்கட்ட கட்டுமானம் நிறைவுற்று, மின்சார இருசக்கர வாகன உற்பத்தி தொடங்கப்பட உள்ளது.

  இந்த தொழிற்சாலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் 3 ஆயிரம் அதிநவீன ரோபோக்கள் வாகன உற்பத்தியை மேற்கொள்ள உள்ளன . ஒவ்வொரு 2 விநாடிக்கும் ஒரு இருசக்கரவாகனம் வீதம் ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான மின்சார இருசக்கர வாகனங்கள் இங்கு தயாரிக்கப்பட உள்ளன.

  Also Read : கொரோனா 2ம் அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை: மத்திய அரசு

  வாகனங்களுக்கு தேவையான பேட்டரிகளும் இதே ஆலையில் தயாரிக்கப்பட உள்ளன. ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் வகையில் இவ்வகை இருசக்கரவாகனங்கள் தயாராக உள்ளன. 500 ஏக்கரில் அமைந்துள்ள தொழிற்சாலையில் 100 ஏக்கர் அளவில் மரங்கள் வளர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.

  அண்மையில் 499 ரூபாய்க்கு முன்பணம் செலுத்தி ஓலா மின்சார இருசக்கரவாகனத்தை முன்பதிவு செய்ய அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பை கண்டு 1 லட்சத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: