• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மூங்கில் காட்டுக்குள் பதுங்கியிருக்கும் ஆட்கொல்லி புலி: புது வியூகம் வகுத்துள்ள வனத்துறை

மூங்கில் காட்டுக்குள் பதுங்கியிருக்கும் ஆட்கொல்லி புலி: புது வியூகம் வகுத்துள்ள வனத்துறை

புலி

புலி

ஆட் கொல்லி புலி பிடிக்க, பரண் அமைத்து கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Share this:
    நீலகிரி மாவட்டம் மசினகுடி - சிங்காரா வனப் பகுதியின் மூங்கில் காடுகளுக்குள் பதுங்கியிருக்கும் ஆட்கொல்லி புலியை வெளியே கொண்டு வருவதற்காக 2 மாடுகள் மற்றும் ஒரு கன்று குட்டியை வனத்துறையினர் வனப் பகுதிகளுக்குள் கொண்டு சென்றுள்ளனர். வனத்திற்குள் புலி பதுங்கியிருக்கும் இடத்தை சுற்றிலும் மரத்தின் மீது பரண் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.

    நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் சுறித் திரியும் ஆட்கொல்லி புலி இதுவரை 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் 4 மனிதர்களையும் கொன்றுள்ளது. இந்த புலியை பிடிக்க 11ஆவது நாளாக வனத்துறையினர் போரடி வருகின்றனர். இந்நிலையில், மசினகுடி - சிங்காரா சாலையில் 30 மீட்டர் இடைவெளியில், ஒவ்வொரு மரத்திலும் 2 வேட்டை தடுப்பு காவலர்கள் மரத்தின் மீது அமர்ந்து கண்காணித்து வருகின்றனர். அத்துடன், புலி பதுங்கியிருக்கும் இடத்தை சுற்றிலும் மரத்தின் மீது பரண் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மோப்பநாய்கள், டிரோன், கும்கி யானைகள் ஆகியவற்றின் உதவியுடன் வனத்துறையினர் புலி இருக்கும் இடத்தை கண்டறிய முயன்று வருகின்றர். புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து வண்டலூர் பூங்காவிற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு புலியை பிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இரண்டு வனத்துறை மருத்துவகுழு மற்றும் 50-க்கு மேற்பட்ட வனத்துறையினர் சிங்காரா மற்றும் மசினகுடி வனப்பகுதியில் புலியை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று புலியின் கால்தடத்தை சத்தியமங்கலம் மோப்பநாய் டைகர் கண்டறிந்த நிலையில் மாலை நேரமாகிவிட்டதால் அதை பின்தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இன்று சிங்காரா வனப்பகுதியில் ஆட்கொல்லி புலியின் நடமாட்டம் இருப்பது தடயங்கள் மூலம் கண்டறியப்பட்டது. அந்த புலி மூங்கில் காட்டில் பதுங்கி இருப்பதால் அதை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை கவச உடை அணிந்த வனத்துறை மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கிகளுடன் அடர் வனப்பகுதிக்குள் விரைந்தனர். மேலும் ட்ரோன் கேமரா மூலமும் வனப்பகுதியை கண்காணிக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 40 இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களையும் அவ்வப்போது வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    Must Read : ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல வேண்டாம் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    சிங்காரா வனப்பகுதியில் மூங்கில்கள் அதிகளவு இருப்பதால் அவற்றுக்குள் ஆட்கொல்லி புலி பதுங்கி கொள்கின்றது. இதனால் அந்த புலியின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிப்பதில் வனத்துறைக்கு சிரமங்கள் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், ஒரு புதர் பகுதியில் இருந்து மற்றொரு புதர் பகுதிக்கு அந்த புலி சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அங்கே, மாடுகள் மற்றும் கன்றுகளை மரங்களில் கட்டிவைத்துள்ள வனத்துறையினர், புலி வெளியே வந்தால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தயார் நிலையில் இருக்கின்றனர். அத்துடன், அந்தப் பகுதியில் பரண் அமைத்தும் கண்காணித்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: