ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கீழடி அருங்காட்சியகம் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் எ.வ.வேலு முக்கிய தகவல்

கீழடி அருங்காட்சியகம் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் எ.வ.வேலு முக்கிய தகவல்

அமைச்சர் எ.வ.வேலு

அமைச்சர் எ.வ.வேலு

கீழடி அருங்காட்சியகம் அமைக்கும் பணி முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

நாமக்கல் நகருக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகளை மீண்டும் அரசு துவங்க முன்வருமா என நாமக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இராமலிங்கம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, செங்கம் - வேலூர் சாலையை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க புறவழிச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை தடுக்க பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்கப்படும். இதற்காக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும்” என்று கூறினார்.

கீழடி அருங்காட்சியக பணிகள் முழுவதும் முடிவடைந்துள்ளன. முதலமைச்சரின் ஒப்புதலுக்கு பிறகு அது திறக்கப்படும் என்றும் கூறிய அமைச்சர் எ.வ.வேலு,  “செங்கம் - வேலூர் சாலையை தேசிய நெடுஞ்சாலை உடன் இணைக்க புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை. புறவழிச்சாலை அமைக்க திட்டம் இறுதி செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றும் கூறினார்.

First published:

Tags: Keeladi, TN Assembly