மதுரை ஹெரிடேஜ் ஹோட்டலில் ஐடி ரெய்டு

மதுரை ஹெரிடேஜ் ஹோட்டலில் ஐடி ரெய்டு

ஹெரிடேஜ் ஹோட்டலில் வருமான வரித்துறை சோதனை

முதல் கட்ட சோதனையில் சொத்து, வரி உள்ளிட்டவை சம்பந்தமான பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து, இந்த குழுமத்திற்கு தொடர்புள்ள மேலும் பல இடங்களிலும் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
மதுரை ஹெரிடேஜ் குழுமத்திற்கு சொந்தமான 5 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  மதுரையில் கோச்சடை அருகே 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது ஹெரிடேஜ். 5 நட்சத்திர சொகுசு விடுதியான இதற்கு சர்வதேச அளவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், இங்கு வரி ஏய்ப்பு மற்றும் பண பரிவர்த்தனை முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also read... அறநிலையத்துறை கோவில்களின் நிலங்களை, கோவில் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றக்கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவுமதுரை மற்றும் சென்னையில் இந்த குழுமத்திற்கு சொந்தமான 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மதுரையில் நான்கு கார்களில் வந்த அதிகாரிகள் விடுதி முழுவதும் சோதனை செய்து வருகின்றனர். விடுதிக்குள் இருந்த வாடிக்கையாளர்களின் கார்கள் அனைத்தும் சோதனை செய்து வெளியே அனுப்பப்பட்டன. வெளியே இருந்து உள்ளெ செல்வதற்கும், உள்ளே இருந்து வெளியே வருவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட சோதனையில் சொத்து, வரி உள்ளிட்டவை சம்பந்தமான பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து, இந்த குழுமத்திற்கு தொடர்புள்ள மேலும் பல இடங்களிலும் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published by:Vinothini Aandisamy
First published: