Home /News /tamil-nadu /

சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் தற்கொலை

சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் தற்கொலை

யஸ்பால்

யஸ்பால்

உடனடியாக சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்த விமான நிலைய அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், விமான நிலைய போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
    சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் இருப்பவா் யஸ்பால் (26) ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்தவா். இவா் 2017 ஆம் ஆண்டில் பணியில் சோ்ந்துள்ளார். யஸ்பால் கடந்த சில காலமாக சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் இன்று காலை சென்னை சா்வதேச விமான நிலையம் புறப்பாடு பகுதியில் பணியிலிருந்துளார். அப்போது விமான நிலைய கழிப்பறைக்குள் சென்றவா், திடீரென தனது கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தாா்.

    துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டு, விமானநிலைய தூய்மை பணியாளா் ஒருவா் ஓடிச்சென்று பாா்த்தபோது, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் யஸ்பால் உயிரிழந்தது தெரியவந்தது.

    Also read... உக்ரைன் போர் சூழல் கவலையளிக்கிறது - தமிழிசை சௌந்தரராஜன்

    உடனடியாக சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்த விமான நிலைய அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், விமான நிலைய போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Chennai Airport, Suicide

    அடுத்த செய்தி