Home /News /tamil-nadu /

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை!

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை!

மாதிரி படம்

மாதிரி படம்

இரண்டு  வருடங்களாக நோய் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் வருமானம் இல்லாமல் கடனை கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுவண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெரு பகுதியை சேர்ந்தவர் சிவாஜி, வயது 40. இவரது மனைவி வனிதா மற்றும் மகன் வெற்றி. சிவாஜி டைலர் தொழில் செய்துவரும் நிலையில் தனது நண்பர்களுடன் இணைந்து சிறிது சிறிதாக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இரண்டு  வருடங்களாக நோய் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் வருமானம் இல்லாமல் கடனை கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடன் கட்டமுடியாத நிலையில் கடன் கொடுத்தவர்கள் சிவாஜியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். நெருக்கடியால் என்ன செய்வது என தெரியாத இருந்த அவர் நேற்று இரவு வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். மகன் வெற்றி தரையில் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

Also read... மாடியில் இருந்து குதித்த கர்ப்பிணி மாணவி.. அதிர்ச்சியில் பிறந்த குழந்தை - நடந்தது என்ன?

அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Suicide

அடுத்த செய்தி