நிலக்கோட்டை அருகே மீன் விற்பது தொடர்பான தகராறில், கூலிப்படையை ஏவி கிராமத்தையே சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கந்தப்பக்கோட்டை கிராமத்தில், பள்ளப்பட்டியை சேர்ந்த ஆதித்யா, சத்ரியன் உள்ளிட்டோர் நேற்று மினி வேனில் மீன் வியாபாரம் செய்துள்ளனர். இவர்கள் வாகனத்தை சாலையின் நடுவே நிறுத்தி வைத்ததால், அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கைகலப்பு ஏற்பட்ட நிலையில், இரு தரப்பு வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்நிலையில், மீன் வியாபாரிகள் ஆதித்யா, சத்ரியன் ஆகியோர் கூலிப்படையை ஏவி, கந்தப்பக்கோட்டை கிராமத்தில் உள்ள வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 30க்கும் மேற்பட்டோர் கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தியுள்ளனர். மேலும் 5 பெட்ரோல் குண்டுகளை வீசிய அவர்கள், அங்கிருந்தவர்களை விரட்டி விரட்டி வெட்டியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால், 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
செய்தியாளர்: சங்கர்
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.