Home /News /tamil-nadu /

கொளுத்தும் வெயில்.. தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்

கொளுத்தும் வெயில்.. தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்

summer

summer

Weather : சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ் நாட்டில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    மன்னார் வளைகுடா, உள் தமிழ் நாட்டு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. குமரி, நெல்லை, டெல்டா, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் வரும் 2ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

    மேலும் நாளை (ஏப்ரல்-1) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Must Read : மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

    இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 6 இடங்களில் வெயில் அளவு 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது. ஈரோடு,  கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், மதுரை நகரம், திருச்சி, வேலூர் ஆகிய 6 பகுதிகளில் வெயில் 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது.

    வெயில்


    அதிபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தியில்  40.5  செல்சியஸ் (104.5 ஃபாரன்ஹீட் டிகிரி ) வெயில் பதிவானது.  அடுத்ததாக மதுரை நகரில் 39.2 செல்சியஸ் (102.56 ஃபாரன்ஹீட் டிகிரி வெயில் பதிவாகியிருந்தது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Meteorological Center, Rain Forecast, Sun, Weather News in Tamil

    அடுத்த செய்தி