Home /News /tamil-nadu /

தொழிலதிபர் வீட்டிலிருந்து 23 சிலைகள் பறிமுதல்

தொழிலதிபர் வீட்டிலிருந்து 23 சிலைகள் பறிமுதல்

கண்டெடுக்கப்பட்ட சிலைகள்

கண்டெடுக்கப்பட்ட சிலைகள்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    சென்னை போயஸ் கார்டனில் உள்ள கிரண் ராவ் என்பவரது வீட்டிலிருந்து 23 கல் தூண்கள் உள்ளிட்ட சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், சிலர் மிரட்டல் விடுத்த நிலையில் பயந்துபோய் சிலைகளை புதைத்து வைத்ததாக கிரண் ராவ் விளக்கம் அளித்துள்ளார்.

    நடிகரும், தொழிலதிபருமான ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான சைதாப்பேட்டை, தஞ்சாவூர், படப்பை உள்ளிட்ட இடங்களில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில் 400க்கும் அதிகமான பழங்கால கற்தூண்கள் மற்றும் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து ரன்வீர் ஷாவின் நண்பர் கிரண் ராவ்வுக்குச் சொந்தமான போயஸ் கார்டன் வீட்டில் கடந்த 2 நாட்களாக போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது வீட்டு வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 23 சிலை உள்ளிட்ட பொருட்கள் தோண்டியெடுக்கப்பட்டன. இந்த சிலைகள் அனைத்தும் சமீபத்தில்தான் புதைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில் கிரண் ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம் சேகரித்து வைத்திருந்த சிலைகளை கேட்டு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்ததாகத் தெரிவித்துள்ளார். அண்ணா சாலை காவல் நிலையத்தில் இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள கிரண் ராவ், 30 ஆண்டுகளாக உணர்வுபூர்வமாக பாதுகாத்து வந்த சிலைகளை பத்திரப்படுத்தும் நோக்கில் புதைத்து வைத்ததாக தெரிவித்துள்ளார்.

    சிலை வியாபாரம் எதிலும் தாம் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ள கிரண் ராவ், தன்னிடமுள்ள ஆவணங்களின் அடிப்படையில் சிலைக்கடத்தல் பிரிவு அதிகாரிகளிடம் உரிய விளக்கம் அளிப்பேன் எனவும் கூறியுள்ளார்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: House of Kiran Rao, The idols

    அடுத்த செய்தி