Home /News /tamil-nadu /

யானைகள் ரயிலில் அடிப்பட்டு உயிரிழப்பதை தடுக்க நீதிமன்றம் கூறிய யோசனை

யானைகள் ரயிலில் அடிப்பட்டு உயிரிழப்பதை தடுக்க நீதிமன்றம் கூறிய யோசனை

யானைகள்

யானைகள்

யானைகள் ரயிலில் அடிப்பட்டு உயிரிழப்பதை தடுக்க யோசனை கூறிய நீதிபதிகள், யானைகள் (Elephant) மட்டுமின்றி எந்த விலங்குகளும் ரயிலில் அடிபடாமல் பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    காட்டு யானைகள் ரயிலில் அடிப்பட்டு உயிரிழப்பதை தடுக்க ரயில் இன்ஜின்களிலும் அதி நவீன தெர்மல் ஸ்கேனிங் கேமராக்களை பொருத்தலாம் என உயர்நீதிமன்றம் யோசனை கூறியுள்ளது.

    தமிழகத்தில் யானைகள் வேட்டையாடப்படுவது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்குகள் நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    ரயில்வே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நவீன தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தியதால் யானைகள் ரயிலில் அடிபடுவதை 69 முறை தடுத்திருப்பதாக குறிப்பிட்டார். யானைகள் கடக்கும் பாதைகள் அடையாளம் காணப்பட்டு 19 கிலோ மீட்டருக்கு வேகக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், யானைகள் கடந்து செல்ல தண்டவாளங்களுக்கு அடியில் பாதை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

    Must Read : “மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு இயக்கம் - மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் யானைகள் மட்டுமின்றி எந்த விலங்குகளும் ரயிலில் அடிபடாமல் பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    Read More : ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க லுக் அவுட் நோட்டீஸ்?

    அது தொடர்பாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை குறித்து வனத்துறையிடம் ஆலோசனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Elephant, High court, Train

    அடுத்த செய்தி