மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க நேரிடும் : உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

சென்னை உயர்நீதிமன்றம்

உரிய கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ளவில்லை என்றால் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையன்று, வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க நேரிடும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • Share this:
    உரிய கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ளவில்லை என்றால் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையன்று, வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க நேரிடும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

    77 வேட்பாளர்கள் போட்டியிடும் கரூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனா தடுப்பு விதிகள் முழுமையாக பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்யக் கோரி தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை மட்டுமல்லாது தமிழகம் முழுதும் வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனா சூழலை கருத்தில் கொண்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் உறுதியளித்தது.

    இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம், என்றும் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யாமல், சமூக இடைவெளியின்றி அரசியல் கட்சிகளை இஷ்டம் போல் பிரச்சாரம் செய்ததே தொற்று பரவலுக்கான காரணம் எனவும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நீதிமன்றம் எவ்வளவோ அறிவுறுத்தியும் தேர்தல் ஆணைம் அதை காதில் வாங்கவில்லை என்றும் நீதிமன்றம் காட்டமாகக் கூறியுள்ளது.

    இதனால், உங்கள் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை என்றும் தேர்தல் ஆணையம் மீது தலைமை நீதிபதி கூறினார். தேர்தல் நாளான்று உரிய பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது என்ற தேர்தல் ஆணையத்தின் பதிலுக்கு, தேர்தல் பிரச்சாரம் நடத்த போதேல்லாம்,வேறு கிரகத்தில் இருந்தீர்களா என தேர்தல் ஆணையத்திடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று, உரிய கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ளவில்லை என்றால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க நேரிடும் என்றும் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

    மேலும், வாக்கு எண்ணிக்கை நாளன்று அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்க வேண்டும், சுகாதாரத்துறை செயலர் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனரிடம் உரிய ஆலோசனை பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Must Read :  ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்கள் மட்டும் அனுமதிக்கலாம் - தமிழக முதல்வர்

     

    கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தெரிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 30 க்கு ஒத்திவைத்து.
    Published by:Suresh V
    First published: