முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு நடந்த கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் இன்னும் மர்ம முடிச்சுக்கள் அவிழ்க்கப்படவில்லை.
சர்வதேசளவில் புகழ்பெற்ற குற்ற வழக்குகளுக்கு நிகரான அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கும் இந்த சம்பவம், முடிவை நோக்கிச் செல்கிறது.
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, வேகமெடுத்துள்ள இந்த வழக்கில், இதுவரைக்கும் வாய் திறக்காத குற்றவாளிகள், நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் மனம் திறந்து பேசியுள்ளனர்.
ஆதாயத்திற்காவே ஒவ்வொரு குற்றமும் அரங்கேற்றப்படுகிறது. அப்படி, கோடநாடு கொலை, கொள்ளையில் ஆதாயம் அடைந்தது யார்? பெற்ற ஆதாயம் என்ன?
வெறும் இரு காண்டாமிருக பொம்மைகளுக்காக கோடநாடு பங்களாவிற்குள் புகுந்து இந்த கும்பல் கொள்ளைத் திட்டத்தை அரங்கேற்றியிருக்குமா? நிச்சயமாக இல்லை.
இந்த குற்றத்தின் மூலம் உண்மையாலுமே ஆதாயம் அடைந்தவர்களை கண்டுபிடித்து கைது செய்வதே காவல்துறையின் முக்கிய கடமை. வழக்கமாக மிகப்பெரிய குற்றச் சம்பவங்களில் அந்தக் குற்றம் எப்படி நடந்தது என்பதில் சர்ச்சை எழும், ஆனால், இந்த வழக்கில் விசாரணையின் மீதே கடும் சந்தேகம் எழுந்துள்ளது.
இது போன்ற பல கேள்விகளுக்கு ஆபரேஷன் கோடநாடு பதிலை கண்டறிய முயன்றுள்ளது. இந்த நிகழ்ச்சி, இன்று (ஞாயிறு) மாலை 4 மணிக்குநியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Jayalalitha, Kodanadu estate