உலகை உலுக்கிய கொரோனாவை தொடர்ந்து, மிரட்டும் டெங்கு காய்ச்சல்.. சுகாதாரத்துறை நடவடிக்கைகள் என்னென்ன?

மாதிரி படம்

அரசின் டெங்கு தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாத நிறுவனங்களுக்கு பாரபட்சம் இல்லாமல் அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையும் விரிவு படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பருவகால காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை அனைத்து மருத்துவகல்லூரி டீன், சுகாதார அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் கிராமங்கள் வரை கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில் தற்போது அத்துடன் சேர்த்து டெங்கு காய்ச்சல் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றது. அதனை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறையின் தொற்று நோய் தடுப்பு இயக்குநர் செல்வநாயகம் சில வழிமுறைகளை பின்பற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்

1. டெங்கு காய்ச்சலுக்கான ரத்த மாதிரி சோதனைகளை விரிவு படுத்தவும் காய்ச்சல் டெங்கு அறிகுறிகளுடன் வருவோருக்கு கண்டிப்பாக ரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.

2. அரசு மற்றும் மாவட்ட நிர்வாக கட்டிடங்களில் தேவையில்லாத பொருட்கள் சேர்வதை தடுக்க வேண்டும்.

3. அரசு மருத்துவமனைகள், அரசு கட்டிடங்கள் ,மொட்டை மாடிகள் பொது இடங்களில் நீர் தேங்கி கொசு உற்பத்தி ஏற்பாடாமல் இருக்க அவற்றை சுத்தம் செய்ய வேண்டும்.

4. மருத்துவமனைகள் மக்கள் கூடும் இடங்களில் நிலவேம்பு கசாயம் குடிக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.



Also read... ஏஜெண்ட் மோசடியால் மலேசியாவில் மாட்டிக்கொண்ட தந்தை: படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப்போகும் நிலையில் சிறுவர்கள்..

5. டெங்கு கொசு உற்பத்தி இருக்கும் இடங்களை உடனே கண்டறிந்து அந்த பகுதி மற்றும் சுற்றியுள்ள இடங்களை உடனே கிருமி நாசினி கொண்டு தூய்மை செய்ய வேண்டும்.

6. அறிகுறிகளை கொண்டு கொரோனா, டெங்கு காய்ச்சல் கண்டறிந்து  சிகிச்சை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

7. பொதுமக்களுக்கு வீட்டில் தேவை இல்லாமல் தண்ணீர் தேக்கி வைத்தல், பிளாஸ்டிக் கப், உரல்கள், பழைய டயர்கள் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

8. அரசின் டெங்கு தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாத நிறுவனங்களுக்கு பாரபட்சம் இல்லாமல் அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

9. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை 24 மணிநேரமும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: