விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களை தலைமை ஆசிரியர் ஒருவர் தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்றார்.
மங்கலம் கிராமத்தில் செயல்படும் அரசு தொடக்கப்பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். விடுப்பு எடுக்காமல் வரும் மாணவர்கள் விமானத்தில் அழைத்து செல்லப்படுவர் என தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் அறிவித்திருந்தார்.
அதன்படி கடந்த 4 மாதமாக விடுப்பு எடுக்காமல் வந்த மாணவர்கள் 20 பேர் மற்றும் ஆசிரியர்கள் 4 பேரை தனது சொந்த செலவில் ரயில் மூலம் சென்னைக்கு சுற்றுலா அழைத்துவந்தார். பின்னர் மாணவர்களை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் அழைத்து சென்றார்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.