மோசடி புகார்: ஜெகத்ரட்சகன் மகன் ஆஜராகி விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மோசடி புகார்: ஜெகத்ரட்சகன் மகன் ஆஜராகி விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
ஜெகத்ரட்சகன்
  • News18
  • Last Updated: September 11, 2020, 10:51 AM IST
  • Share this:
முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க எம்.பி யுமான ஜெகத்ரட்சகன் மீதான மோசடி புகார் தொடர்பாக, அவரது மகன் சந்தீப் ஆனந்த் சிபிசிஐடி போலீசார் முன் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்பி-யுமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவரின் புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர். அந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதி என்.சதீஸ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது சி.பி.சி.ஐ.டி தரப்பில், இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஜெகத்ரட்சகன் அவரது மனைவி, அவரது மகன், மகள், மைத்துனர் என ஐந்து பேருக்கு சம்மன் அனுப்பியும் இதுவரை விசாரணைக்கு யாரும் ஆஜராக வில்லை என குற்றம் சாட்டினார்.


அதற்கு பதிலளித்த ஜெகத்ரட்சகன் தரப்பு, ஜெகத்ரட்சகன், அவரது மனைவி, மைத்துனர் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளதாகவும், ஜெகத்ரட்சகன் நேற்றைய தினம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போதும் அவரை தொடர்ந்து வீட்டில் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதன் காரணமாகவே விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

Also read... கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து எம்.எல்.ஏ கு.க.செல்வம் மனு - பதிலளிக்கும்படி திமுக தலைவர், பொதுச்செயலாளருக்கு உத்தரவுஇதனை பதிவு செய்த நீதிபதி, வழக்கு குறித்த விசாரணைக்கு ஆஜராவது குறித்து சந்தீப் ஆனந்துக்கு சிபிசிஐடி புதிதாக சம்மன் அனுப்ப உத்தரவிட்டதுடன், அந்த சம்மனில் சந்தீப் ஆனந்த் சிபிசிஐடி முன்பு ஆஜராகி, வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து, காவல்துறையின் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.மேலும், ஜெகத்ரட்சகன் வழக்கு குறித்து சி.பி.சி.ஐ. டி போலீசார் அக்டோபர் 5ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.
First published: September 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading