முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம்!

சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம்!

மாதிரி படம்

மாதிரி படம்

பூம்புகார் பாரம்பரிய மீனவர் நலச் சங்கத்தின் செயலாளர் ஜம்புலிங்கம் கபடிக்குஞ்சு என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பாரம்பரிய மீன்பிடி எல்லையில் கட்டு மரங்கள் மற்றும் விசை படகுகளில் மீன்பிடிக்க செல்வோர் சுருக்குமடி மீன்பிடி வலைகளை பயன்படுத்தக்கூடாது என பிறப்பிக்கப்பட்ட உத்தர்வு தவறு என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பூம்புகார் பாரம்பரிய மீனவர் நலச் சங்கத்தின் செயலாளர் ஜம்புலிங்கம் கபடிக்குஞ்சு என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பாரம்பரிய மீன்பிடி எல்லையில் கட்டு மரங்கள் மற்றும் விசை படகுகளில் மீன்பிடிக்க செல்வோர் சுருக்குமடி மீன்பிடி வலைகளை பயன்படுத்தக்கூடாது என பிறப்பிக்கப்பட்ட உத்தர்வு தவறு என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அண்டை மாநிலங்களில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, புதிய கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை என்றும், 2000ஆம் ஆண்டில் உள்ள விதிகளை பின்பற்றியே புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், 2000ஆம் ஆண்டு விதிகளை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Also read... புதுச்சேரியில் ஒரே நாளில் 1,849 பேருக்கு கொரோனா தொற்று - 3 பேர் உயிரிழப்பு!

top videos

    2000ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கு தொடராமல், அதன் பின்னர் பிறப்பிக்கப்பட்ட விதிகளை எதிர்த்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    First published:

    Tags: Madras High court