ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

புதிய தரவரிசை பட்டியல் அடிப்படையில் குரூப் 4 தேர்வு கலந்தாய்வு இன்று தொடங்கியது!

புதிய தரவரிசை பட்டியல் அடிப்படையில் குரூப் 4 தேர்வு கலந்தாய்வு இன்று தொடங்கியது!

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

குரூப் 4 தேர்வு முறைகேடு  விசாரனை நடைபெற்று வரும் நிலையில் கடந்த பிப். 12-ல் வெளியிடப்பட்ட  புதிய தரவரிசை அடிப்படையில்  இன்று முதல் கலந்தாய்வு தொடங்கியது.

இளநிலை உதவியாளர், நில அளவையாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்தாளர்  ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 9,882 பணியிடங்களுக்கு, கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி தேர்வு நடைபெற்றது.

கடந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது,

அதனை தொடர்ந்து முறைகேடு நடந்துள்ளதாக வந்த புகாரை அடுத்து முதல் 100 தரவரிசையில் இடம்பெற்ற 40 நபர்கள் நீக்கப்பட்டு புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக 99 தேர்வர்களுக்கு தேர்வெழுத வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது.

குரூப் 4 முறைகேடு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் குரூப் 4 கலந்தாய்வு துவங்கும் என இந்த மாதம் 12-ம் தேதி  டி.என்.பி.எஸ்.சி அறிவித்தது அதன்படி இன்று கலந்தாய்வு துவங்கி அடுத்த மாதம் 17-ம் தேதி வரை சென்னை பாரிமுனை பகுதியில் அமைந்துள்ள அரசு பணியாளர் தேர்வாணைய வளாகத்தில்  கலந்தாய்வு நடைபெறுகின்றது.

இளநிலை உதவியாளர், நில அளவையாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பணிகளுக்கு  எழுத்துத்தேர்வு எழுதி தரவரிசை பட்டியல் வெளியிட பட்டவர்களுக்குஇன்று முதல் சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது.

மொத்தம் 11,138 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். ஒரு நாளைக்கு 500 பேர் வீதம் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மார்ச் 17-ம் தேதி வரை கிராம நிர்வாக அலுவலகர், இளநிலை உதவியாளர், நில அளவையர் ஆகிய பணியிடங்களுக்கும் அதன் பின்னர் 2840 தட்டச்சர் காலிப்பணியிடங்களுக்கும் 1035 சுருக்கெழுத்தர்  பணிகளுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: TNPSC